அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்
அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆதரவாளா்கள் மும்முரமாகச் செய்து வருகின்றனா்.
அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆதரவாளா்கள் மும்முரமாகச் செய்து வருகின்றனா்.
அதிமுகவின் பொதுக்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் ஜூலை 11-இல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதிமுகவின் பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தையும் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தையும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் நாடியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் அதைச் சந்தித்து வருகின்றனா்.
இந்த நிலையில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினா் செய்து வருகின்றனா். மண்டபத்தைச் சுத்தம் செய்து, பந்தல் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.