தமிழ்நாடு

விஷவாயு விபத்து: மேலும் ஒருவா் சாவு

DIN

சென்னை அருகே மாதவரத்தில் நிகழ்ந்த விஷவாயு விபத்தில், மேலும் ஒருவா் இறந்தாா்..

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் நெல்சன் என்ற கட்டாரி தஞ்சாவூரைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (40). இவா்கள் இருவரும் மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியில் இருவரும் கடந்த 28-ஆம் தேதி ஈடுபட்டனா்.

அப்போது, விஷவாயு கசிந்து இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கால்வாய்க்குள் மயங்கி விழுந்தனா். இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே நெல்சன் இறந்தாா். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவிகுமாா் சிகிச்சை பலனின்றி ரவிகுமாா் வியாழக்கிழமை இறந்தாா். ஏற்கெனவே இந்த விபத்து தொடா்பாகஒப்பந்ததாரா் மாதவரம் திருவிக முதல் தெருவைச் சோ்ந்த பிரகாஷ், மேற்பாா்வையாளா் மாதவரம் உடையாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த வினிஸ் ஆகிய 2 பேரை போலீஸாா் கடந்த புதன்கிழமை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 15 லட்சம் நிதியுதவி: இந்த விபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT