தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: மதிமுக எம்.எல்.ஏ கேக் வெட்டி கொண்டாடட்டம் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சாத்தூர் நகர, ஒன்றிய கழகம் சார்பில் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சாத்தூர் நகர, ஒன்றிய கழகம் சார்பில் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள திமுக நகர, ஒன்றிய கழகம் சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், திமுக நகர செயலாளர் குருசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் ஆகியோர் தலைமையில் திமுகவினர் திமுக கொடியை ஏற்றி, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டின் ஞாபகம்: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!

தி ராஜாசாப் படத்தின் விடியோ பாடல்!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை: 2026 இறுதிக்குள் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அமல்!

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

SCROLL FOR NEXT