காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: 69 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 18-வது வார்டு திமுக சார்பில் அவரது வயதான 69-ஐ கொண்டாடும்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 18-வது வார்டு திமுக சார்பில் அவரது வயதான 69-ஐ கொண்டாடும் வகையில் 69 கிலோ கேக் வெட்டி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 18-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள மல்லிகா ராமகிருஷ்ணன் தான் வசிக்கும் வைகுண்டம் தெருவில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அவரது வயதான 69-ஐ குறிக்கும் வகையில் 69 கிலோ கேக் வெட்டியும், அனைவருக்கும் இனிப்பும் வழங்கினார். தொண்டர்கள் பலரும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணியின் துணைச் செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்குமார், வட்டப் பிரதிநிதிகள் சம்பத், வரதன், விஜயா, கீதா ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். நகரின் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், இனிப்பு வழங்குதல் மற்றும் அன்னதானங்களும் நடைபெற்றன.