தமிழ்நாட்டில் புதிதாக 348 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 348 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 348 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 53,132 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 348 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஸ்டாலின் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர் : கமல்ஹாசன்
மேலும் 1,025 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 34,06,649 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,006 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,066 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.