முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 320 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 320 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பபட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 320 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பபட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 52,536 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 320 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 946 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,07,595 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என 3 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 38,009 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 4,437 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.