முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகியுள்ளநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. ப

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகியுள்ளநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.640 உயா்ந்து, ரூ.39,024-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் மீண்டும் விலை உயா்ந்தது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கம் புதன்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.640 உயா்ந்து, ரூ.39,024-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயா்ந்து, ரூ.4,878-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.2.10 உயா்ந்து, ரூ.72.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,100 உயா்ந்து, ரூ.72,100 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,878

1 பவுன் தங்கம்............................... 39,024

1 கிராம் வெள்ளி............................. 72.10

1 கிலோ வெள்ளி.............................72,100

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,798

1 பவுன் தங்கம்............................... 38,384

1 கிராம் வெள்ளி............................. 70.00

1 கிலோ வெள்ளி.............................70,000.

முழு கட்டுரையைப் படிக்க →