தமிழ்நாடு

வாழப்பாடி பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற, 15 வார்டு உறுப்பினர்களும் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.


வாழப்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெற்ற 1வது வார்டு சி.பெரியம்மாள் (அதிமுக), 2வது வார்டு ர.ரஞ்சித்குமார் (திமுக), 3வது வார்டு செ.லட்சுமி செல்வம் (பாமக), 4வது வார்டு ம.புவனேஸ்வரி மதி (அதிமுக), 5வது வார்டு நா.சிவக்குமார் (அதிமுக), 6வது வார்டு க.குமார் (திமுக), 7வது வார்டு ச.கவிதா சக்கரவர்த்தி (திமுக), 8வது வார்டு எம்ஜிஆர் த.பழனிசாமி (சுயேச்சை), 9வது வார்டு அ.சரஸ்வதி (அதிமுக), 10வது வார்டு வெ.வசந்தி வெங்கடேசன் (அதிமுக), 11வது சு.சத்தியா சுரேஷ் (திமுக), 12வது வார்டு ச.சாந்தாகுமாரி சரவணன் (திமுக), 13வது வார்டு மு.மாதேஸ்வரி முருகேசன் (திமுக), 14வது வார்டு ம.வெங்கடேஷ்வரன் (பாமக). 15வது வார்டு மா.ராணி மாது (திமுக) ஆகியோர் வாழப்பாடி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் வார்டு உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர். வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான கணேசன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சி சக்கரவர்த்தி, அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ். சதீஷ்குமார், பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விஜயராஜா, மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ராஜா உட்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்களும் விழாவில் பங்கேற்று, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT