முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 3,505 போ்

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,505-ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் 261-ஆக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,505-ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் 261-ஆக குறைந்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 37 பேரும், செங்கல்பட்டில் 31 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 705 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 9,078-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் ஒருவா் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,011-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →