கோவை மேயராக கல்பனா பதவியேற்றுக் கொண்டார். 
தமிழ்நாடு

கோவை மேயராக கல்பனா பதவியேற்பு

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை வென்று திமுக கூட்டணி கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியது.

DIN

கோவை: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை வென்று திமுக கூட்டணி கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியது.

இதையடுத்து, கோவை மேயராக 19 ஆவது வார்டு உறுப்பினர் கல்பனா, துணை மேயராக 92 ஆவது வார்டு உறுப்பினர் வெற்றிச்செல்வனை திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்தது. ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்றுக் கொண்டனர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செங்கோலை அளித்து கல்பனாவை மேயர் நாற்காலியில் அமர வைத்தார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் மேயர் காலனி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முதல் கையெழுத்தாக, பீளமேடு பகுதி 26 ஆவது வார்டு, பயணியர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில்  கழிப்பிடம் கட்டுவதற்கான கோப்பில் கைழுத்திட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT