தமிழ்நாடு

கம்பம் நகர்மன்றத் தலைவராக வனிதா நெப்போலியன் போட்டியின்றித் தேர்வு

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்றத் தலைவராக திமுக கவுன்சிலர் வனிதா நெப்போலியன், வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு பெற்றார்.

தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 3 ஆவது வார்டில் திமுக கவுன்சிலர் வனிதா நெப்போலியன் வெற்றி பெற்றார். இவரை திமுக தலைமை, நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. வெள்ளிக்கிழமை தேர்தல் அலுவலர் பாலமுருகனிடம் வனிதா நெப்போலியன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 14 ஆவது வார்டு திமுக உறுப்பினர் வசந்தி முன்மொழிந்தார். 15 ஆவது வார்டு உறுப்பினர் சுல்தான் சல்மான் பார்சி வழிமொழிந்தார்.

வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ப.பாலமுருகன் அறிவித்தார்.

மறைமுகத் தலைவர் தேர்தலில் 25  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT