முகப்பு
திமுக வேட்பாளர் சூர்யா ஷோபன் குமார் தனது ஆதரவாளர்களுடன் மாநகராட்சி அலுவலகம் வந்தார்.
தமிழ்நாடு

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
திமுக வேட்பாளர் சூர்யா ஷோபன் குமார் தனது ஆதரவாளர்களுடன் மாநகராட்சி அலுவலகம் வந்தார்.
பகிர்:

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 50 மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் 26 பேர் வாக்களிப்பவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர மேயர் தேர்தல் மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூட்டத்தில் ஆணையரும் தேர்தல் அலுவலருமான ப.நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

திமுக தலைமை கழகம் மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் மகேஸ்வரி யுவராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த டாக்டர் சூர்யா சோபன் குமாரும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

திமுக வேட்பாளரான சூர்யா ஷோபன் குமாரும் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதால் பாமக, சுயேச்சைகள், அதிமுக, பாஜக ஆகியோர் இணைந்து சூர்யா சோபன் குமாருடன் தேர்தல் நடைபெறும் இடத்துக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் மேயர் தேர்தலில் காஞ்சிபுரத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் 31 நபர்கள் வெற்றிபெற்று இருந்தபோதும் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெறுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

இதனால் காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →