முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு மேயராக நாகரத்தினம் தேர்வு

ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

Updated On : 4 மார்ச், 2022 at 11:47 AM
ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

ஈரோடு மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற 60 மாமன்ற உறுப்பினர்களில் 54 உறுப்பினர்கள் , ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் ஆணையர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் கலந்து கொண்டனர். இதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் இருந்தது.

50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற நாகரத்தினம் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அறிவித்தார் .

Advertisement

தொடர்ந்து மேயராக வெற்றி பெற்ற நாகரத்துனத்துக்கு செங்கோல் வழங்கி மேயர் பதவிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள்  பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.