உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல - கே. பாலகிருஷ்ணன் 
தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல - கே. பாலகிருஷ்ணன்

உள்ளாட்சி தலைவர் தேர்தலில் கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: உள்ளாட்சி தலைவர் தேர்தலில் கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒருசில இடங்களில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக எதிர் அணியினர் பலனடைந்ததையும் பார்த்தோம்.

இப்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்காக மறைமுக தேர்தல்கள் நடந்துள்ளன. இதிலும் கூட்டணி கட்சிகளிடையே பேசி உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இந்த உடன்பாடு பெரும்பாலும் அமலாகவில்லை.

திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கியதுடன் பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், இதர கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.

இது ஆரோக்கியமான அரசியலின் வெளிப்பாடு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ காலபைரவருக்கு லட்சாா்ச்சனை

பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்

இச்சிப்பட்டியில் டிசம்பா் 15-இல் மின்தடை

நிதீஷ் குமாரை பதவி நீக்க சதி! மகா கூட்டணி கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை!

இது பெண்களுக்கான அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT