தலைவர் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமார் 
தமிழ்நாடு

மா.கம்யூக்கு ஒதுக்கிய திருமுருகன்பூண்டி நகராட்சியைக் கைப்பற்றியது திமுக

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியை மா.கம்யூ ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. 

DIN

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியை மா.கம்யூ ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. 

திருமுருகன்பூண்டி  நகராட்சியில்  மொத்தமுள்ள27 வார்டுகளில்  திமுக 9, அதிமுக 10 இ.கம்யூ 5 மா.கம்யூ3. ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தன. திருமுருகன்பூண்டி நகராட்சியை திமுக தலைமை மா. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக 10வது வார்டில் வெற்றி பெற்ற பி. சுப்பிரமணியம் வேட்பாளராக அறிவித்தனர்.

இந்நிலையில்  நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக சார்பாக 26 வார்டில் வெற்றி பெற்ற குமார் சுப்பிரமணியம் அவர்களுக்கு போட்டியாக வேட்புமனு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில் சுப்பிரமணியம் 12 வாக்குகள் பெற்றார். திமுக சார்பாக போட்டியிட்ட குமார் 15 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT