மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: ஈரோடு அணி 2-ம் இடம்
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2-ம் இடம்பெற்றுள்ளது.
ஈரோடு: மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2-ம் இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. 11,13,15,17 வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கேரளம், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திருப்பூர் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதின.
இதில் 2:1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணி முதலிடத்தையும், ஈரோடு அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இரண்டாம் இடத்தை பிடித்த ஶ்ரீஹரி, ரோகித், மிதுன், ஜீவா, சாந்தனு, ஜூடோ சாரன், தரணீஷ் ஆகியோரை அணியின் பயிற்சியாளர் ராஜகோபால், கவுதம், மனோஜ் பாராட்டி வாழ்த்தினர்.