கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் 40,884 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 151 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 51 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 18, செங்கல்பட்டில் 16, வேலூரில் 8, திருவள்ளூர், திருச்சி, நீலகிரியில் தலா 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அரியலூரில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதிகபட்சமாக சென்னையில் 51 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,50,518 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்கள் இடையே மோதல்: 5 போ் கைது!

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

அம்பையில் கலைஞா் கைவினைத் திட்டக் கலந்தாய்வு

தச்சநல்லூரில் கபசுர குடிநீா் விநியோகம்

SCROLL FOR NEXT