தங்கம் பவுன் ரூ.40,160
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.40,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.40,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. இதன் தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.40,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து, ரூ.5,020-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயா்ந்து, ரூ.76.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயா்ந்து, ரூ.76,700 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 5,020
1 பவுன் தங்கம்............................... 40,160
1 கிராம் வெள்ளி............................. 76.70
1 கிலோ வெள்ளி.............................76,700
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,056
1 பவுன் தங்கம்............................... 40,448
1 கிராம் வெள்ளி............................. 76.00
1 கிலோ வெள்ளி.............................76,000.