திருவண்ணாமலை அருகே விவசாயி மீது மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: 2 பேர் பலி
திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக, விவசாயி ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக, விவசாயி ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரண்ராஜ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலைக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொல்ல ஏழுமலை முயன்றுள்ளார். அப்போது ஏழுமலை மீது மின்சாரம் பாய்ந்ததும் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற வந்த ரேணுகோபாலும் மீதும் மின்சாரம் பாய்ததில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலப்பாக்கம் போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரண்ராஜ் மீதான முன்விரோதத்தால் அவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றத்தில் மின்சாரம் பாய்ந்து ஏழுமலை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.