முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போர்ச் சூழல் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. குறிப்பாக, கடந்த திங்கள்கிழமை (மார்ச் 7) ஒரு சவரன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. மேலும், விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ.40,448-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ.392 உயர்ந்து ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.85 உயர்ந்து ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.1.60 காசுகள் அதிகரித்து ரூ. 77.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.


புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 5,105

1 பவுன் தங்கம்............................... 40,840

1 சவரன் வெள்ளி............................. 77.60

1 கிலோ வெள்ளி.............................77,600


செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,056

1 சவரன் தங்கம்............................... 40,448

1 கிராம் வெள்ளி............................. 76.00

1 கிலோ வெள்ளி.............................76,000
 

முழு கட்டுரையைப் படிக்க →