முகப்பு
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ மகன்‌ ராகேஷ் ரங்கநாதன் பயணித்த ஜீப்.
தமிழ்நாடு

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விபத்தில் பலி

ஈ.சி.ஆர். சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ்நாடு

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விபத்தில் பலி

ஈ.சி.ஆர். சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ மகன்‌ ராகேஷ் ரங்கநாதன் பயணித்த ஜீப்.
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஈ.சி.ஆர். சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ. இவரது மகன் சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த ராகேஷ் ரங்கநாதன்(21). இவர், தனது நண்பர் சென்னையைச் சேர்ந்த வேதவிகாஷ்(21) என்பவரும் புதன்கிழமை நள்ளிரவு ஜீப்பில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டனர்.

சென்னையில் இருந்து இவர்கள் கிழக்கு கடற்கரை சாலை(ஈ.சி.ஆர்.) வழியாக இவர்கள் பயணத்தை மேற்கொண்டார்.

வியாழக்கிழமை அதிகாலை 3‌ மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்ப்புத்துப்பட்டு என்ற இடத்தில் சென்றபோது சாலையில் திடீரென மாடுகள் குறுகே வந்துள்ளன.

இதனை எதிர்பாராத ராகேஷ் ரங்கநாதன் உடனே காரை திரும்பியுள்ளார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதியது.

இந்த விபத்தில் காரின்‌ முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.  காரில் இருந்த எம்.பி. இளங்கோ மகன்  ராகேஷ் ரங்கநாதன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த அவரது நண்பர் வேதவிகாஷ் பலத்த காயமடைந்தார்.

இது தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த வேதவிகாஷை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பின்னர், உயிரிழந்த ராகேஷ் ரங்கநாதன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி மாநிலம், கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →