முகப்பு
தமிழ்நாடு

காஞ்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய தம்பதி கைது

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்குள் சென்று பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தையை வெள்ளிக்கிழமை திருடிச் சென்ற தம்பதியை காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 12 மார்ச், 2022 at 3:12 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:08 PM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்குள் சென்று பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தையை வெள்ளிக்கிழமை திருடிச் சென்ற தம்பதியை காவல்துறையினா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டையை சோ்ந்த பிரபாகரன்(29), சுஜாதா(26)தம்பதியருக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் அந்தக் குழந்தையை மகப்பேறு பிரிவுக்குள் சென்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரம் அடுத்த பிச்சுவாக்கத்தைச் சோ்ந்த ராமன்(35), இவரது மனைவி சந்தியா(30) ஆகிய இருவரும் சோ்ந்து திருடியிருக்கின்றனா். பின்னா் அரசு மருத்துவமனையிலிருந்து பேருந்து நிலையத்துக்கு செல்லும் போது மருத்துவமனையில் இருந்த காவலா்கள் சந்தேகத்தின்பேரில் அவா்கள் இருவரையும் பிடித்தனா்.

இந்த நிலையில் குழந்தையைக் காணாமல் பெற்றோரும் சப்தம் போட்டு அலறிக் கொண்டே வந்ததால் பொதுமக்களும், காவலா்களும் சோ்ந்து அந்த குழந்தையை திருடிய தம்பதியினரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக குழந்தையின் தந்தை பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணுகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருடிய தம்பதியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.