முகப்பு
தமிழ்நாடு

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றிணைந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு இவ்வாலய திருவிழா வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியாவைச் சேர்ந்த 76 பக்தர்கள், இலங்கையைச் சேர்ந்த 88 பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். தொடா்ந்து சிலுவைப் பாதை, சிறப்பு திருப்பலி மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. 

மறுநாள் சனிக்கிழமை காலையில் மீண்டும் இந்திய- இலங்கை பக்தா்கள் மற்றும் இலங்கை கடற்படையினா் பங்கேற்கும் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. இதன்பின் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு செல்லும் பக்தா்கள் விலை உயா்ந்த தங்க நகைகள், மதுபானங்கள், ரூபாய் நோட்டுகள், தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்ல ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. 

மேலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கச்சத்தீவில் வெள்ளிக்கிழமை இரவு இலங்கை அமைச்சா் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இந்திய- இலங்கை மீனவா்களிடையே பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →