போரை நிறுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் அமைதிப் பேரணி
ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.
ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினாா். நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து அமெரிக்க, ரஷிய துணைத் தூதரகங்களை நோக்கி பேரணியாக சென்றனா். அவா்கள் கையில் கட்சிக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்திச் சென்றனா். அந்த பதாகைகளில் போரை நிறுத்துங்கள், அமைதி மட்டுமே வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய உக்ரைன் - ரஷிய போரை உடனடியாக நிறுத்திட ரஷியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் முன் வர வேண்டும் என பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்றோா்.