ஜோலார்பேட்டையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன். 
தமிழ்நாடு

புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்

ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, பரோலை ரத்து செய்ய சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

DIN

ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, பரோலை ரத்து செய்ய சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

கடந்த மே 28-ஆம் தேதி முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார். மேலும், பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விடுதலைக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த நிலையில், பேரறிவாளனுக்கு புதன்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிணை வழங்கி உத்தரவிட்டனர்.  பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பரோலை ரத்து செய்ய வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பின் பேரறிவாளன் பிணையில் வெளியே வருவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT