தமிழ்நாடு

விடுபட்ட பதவிகளுக்கு மார்ச் 26-ல் மறைமுகத் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட 62 பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட 62 பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 4.3.2022 அன்று நடைபெற்ற சாதாரண மறைமுகத் தேர்தல்களின்போது பல்வேறு காரணங்களால் தேர்தல்கள் நடைபெறாமல் காலியாக உள்ள கீழ்காணும் பதவியிடங்களுக்கு வரும் 26ஆம் தேதி நகராட்சி/பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவர்/துணைத்தலைவர் மறைமுகத் தேர்தலை வரும் 26ஆம் தேதி நடத்திட உள்ளதாக ஏற்கெனவே ஆணையத்தால் தெரிவித்ததை தொடர்ந்து ஆடுதுறை பேரூராட்சித் தலைவர்/துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் வரும் 26ஆம் தேதி நடத்திட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் தேர்தல்கள் நடைபெறாமல் காலியாக உள்ள கீழ்காணும் பதவியிடங்களுக்கும் வரும் 26ஆம் தேதி மறைமுகத் தேர்தல் கூட்டம் நடத்திட ஆணையத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

மேற்படி நகராட்சி/பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் காலை 9.30 மணிக்கும், நகராட்சி/பேரூராட்சி துணைத்தலைவர்களை தேந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் மதியம் 2.30 மணிக்கும் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் நடைபெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT