தமிழ்நாட்டில் 2ஆம் நாளாக கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை
தமிழகத்தில் தொடர்ந்து 2ஆம் நாளாக கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 2ஆம் நாளாக கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 43,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 105 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 39 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 12 பேரும், செங்கல்பட்டில் 10 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மற்றொருபுறம் மேலும் 265 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதையும் படிக்க- மேற்கு வங்கம், பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தில் இடைத்தேர்தல்
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 12,491-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,301 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 2ஆம் நாளாக கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 38,023 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.