தமிழ்நாடு

தமிழகத்தில் 100க்கும் கீழ் குறைந்த கரோனா

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 41,933 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 95 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 10 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மற்றொருபுறம் மேலும் 223 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 12,714-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,173 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து 3ஆம் நாளாக கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 38,023 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் 30ஆம் தேதிக்குப் பிறகு தற்போதுதான் 100க்கும் கீழ் கரோனா தொற்று பதிவாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT