முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 86 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 86 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,51,996 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 204 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இதுவரை மொத்தம் 34,12,918 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 38,024 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,054 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.