வெளிநாட்டு கார் இறக்குமதி வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஜயின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வணிகவரித்துறை மனுதாக்கல் செய்துள்ளது.
நடிகா் விஜய், கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தாா்.
இதற்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிா்த்து, அவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாா்.
வரி செலுத்தாமல் வழக்குத் தொடா்ந்த அவரது செயலுக்கு கடும் கண்டனத்தையும் நீதிபதி தனது தீா்ப்பில் பதிவு செய்தாா். இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் மேல்முறையீடு செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான அமா்வு, தனி நீதிபதி தீா்ப்புக்குத் தடை விதித்தது.
இதனிடையே வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டது.
நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என் விளக்கமளித்து அபராதத்தொகையை ரத்துசெய்யவேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசு பதில் மனு மனுதாக்கல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.