கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் மரியாதை 
தமிழ்நாடு

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

DIN

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். திமுக அரசின் மற்றும்  நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். கடந்த ஆண்டு திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. 

அண்ணா நினைவிடத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் மரியாதை

பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிவடைந்ததையடுத்து சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின், நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் அண்ணாவின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT