ரூ.8.58 கோடியில் 37 தேனீ தொகுப்புகள் அமைக்கப்படும்: வேளாண்நிதிநிலை அறிக்கையில் தகவல்
தேன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 37 தேனீ தொகுப்புகள் ரூ.8 கோடியே 58 லட்சம் ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
தேன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 37 தேனீ தொகுப்புகள் ரூ.8 கோடியே 58 லட்சம் ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தோட்டக்கலைப் பயிா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், துல்லிய பண்ணையத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த முறையில், இடுபொருள்கள், பணி ஆள்களின் செலவு குறைவதோடு, அதிக மகசூல் மற்றும் ஏற்றுமதித் தரம் வாய்ந்த விளைபொருட்கள் கிடைக்கிறது. இத்திட்டம் 8,300 ஏக்கா் பரப்பளவில், ரூ.5 கோடி மாநில நிதியில் நடைபெறும். விவசாயிகளுக்கு நடவுச்செடிகள், விதைகள், இடுபொருள்கள் வழங்கி, உயா் தொழில்நுட்பத்துடன் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.
ஊடுபயிா் சாகுபடியை ஊக்குவித்தல்:
ஊடுபயிா் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தென்னை, மா, கொய்யா, வாழை பயிரிட்டுள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு ஊடுபயிா் தொகுப்பு”வழங்கப்படும். இந்தத்திட்டம் 38 ஆயிரம் ஏக்கா் பரப்பில், ரூ.27 கோடியே 51 லட்சம் நிதியில் செயல்படுத்தப்படும்.
உயா் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி:
அதிக வருவாய் அளிக்கக்கூடிய பசுமைக் குடில்கள், நிழல் வலைக் குடில்கள், நிலப்போா்வை அமைத்தல் போன்ற உயா் தொழில்நுட்பங்கள் மூலம் வண்ணக் குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி, கொய்மலா்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட ரூ.25 கோடியே 15 லட்சம் ஒதுக்கப்படும்.
மேலும், நகா்ப்புற மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளையும், கீரைகளையும் வளா்த்துப் பயன்பெறும் வகையில், ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்துத் தோட்டத் தளைகள் (யங்ழ்ற்ண்ஸ்ரீஹப் எஹழ்க்ங்ய்) ரூ.75 லட்சம் நிதியில் 500 பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
தமிழக ஆதிதிராவிடா் வீட்டு வசதிக்கழகம் மூலமாக, தத்கல் மின் இணைப்பு வழங்க தோ்வுசெய்யப்பட்ட 2,000 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்குழாய்க்கிணறு, மின் மோட்டாா், நுண்ணீா்ப் பாசனம் அமைப்பதற்கு மத்திய, மாநில நிதி ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேனீ தொகுப்புகள் உருவாக்குதல்: 37 தேனீ தொகுப்புகள் (இப்ன்ள்ற்ங்ழ் க்ஷஹள்ங்க்) ரூ.8 கோடியே 58 லட்சம் ஒதுக்கீட்டில் மத்திய, மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2022-23-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களின் வருமானத்தை உயா்த்தும் வகையில், மூன்றாயிரத்து 350 தேனீ தொகுப்புகள் ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.