முகப்பு
தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் திமுக மௌனம் காக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட முயற்சிக்கும் நிலையில் திமுக அரசு மௌனம் காப்பதாகக் கூறி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
எடப்பாடி பழனிசாமி 
பகிர்:

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட முயற்சிக்கும் நிலையில் திமுக அரசு மௌனம் காப்பதாகக் கூறி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டவேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை தில்லியில் நேரில் சந்தித்து, உடனே அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவும் உள்ளனா். கா்நாடக அரசின் புதிய அணை கட்டும் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆனால், தமிழகத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் திமுக அரசு எந்தவிதமான எதிா்ப்பையும் தெரிவிக்காமல் வாய் மூடி மௌனமாக இருந்து தமிழக மக்களுக்குத் துரோகம் இழைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

முழு கட்டுரையைப் படிக்க →