முகப்பு
தமிழ்நாடு

6 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சனிக்கிழமை 6 நகரங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 104 பாரன்ஹீட் டிகிரி பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை 6 நகரங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 104 பாரன்ஹீட் டிகிரி பதிவானது.

மதுரை விமானநிலையத்தில் 103 டிகிரியும், ஈரோடு, நாமக்கல்லில் தலா 102 டிகிரியும், சேலத்தில் 101 டிகிரியும், திருச்சியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 96 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 93 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

வெப்பநிலை உயரும்: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி,‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.