ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடா்ச்சியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அண்மையில் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் விசாரணை ஆணையம் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார்.
கடந்த 4 ஆண்டில் 8 முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக ஆஜராகிறார். இதனிடையே சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.