ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீா்செல்வம் ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் இன்று ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் இன்று ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிக்க- ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்
இதன் தொடா்ச்சியாக ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி ஆகியோா் மாா்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. அதன்படி, அவா்கள் இருவரும் இன்று ஆஜராகியுள்ளனர். முன்னதாக விசாரணை ஆணையம் முன்பு இன்று காலை இளவரசி ஆஜரான நிலையில் தற்போது அவரைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும் ஆஜராகியுள்ளார்.