முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மழையும் பெய்யும், வெயிலும் கொளுத்தும்

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 22 மார்ச், 2022 at 1:46 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:15 PM

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

Advertisement

22.03.22, 23.03.22: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.03.22, 26.03.22: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

22.03.22, 23.03.22: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்)

வாத்தலை அணைகட்டு 6, மோகனூர் 6, கரூரூ, முசிறி தலா 5, மாயனூர், சேலம் தலா 4, தருமபுரி, ஆத்தூர், கீழ்பென்னாத்தூர், கோத்தபிரி, கிருஷ்ணராயபுரம், ஏற்காடு, மணப்பாறை தலா 3, விரிஞ்சிபுரம், உதகமண்டலம், குளித்தலை, மங்களபுரம் தலா 2 இ அரூர், வேலூர், டேனிஷ்பேட்டை, கெட்டி, செங்கம், பஞ்சப்பட்டி, தருமபுரி, தேன்கனிக்கோட்டை, மேட்டூர், சமயபுரம், காட்பாடி, வாணியம்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி, திருமானூர் தலா 1 செ.மீ பதிவாகியுள்ளது. 

குறிப்பு: நேற்று காலை வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான நிக்கோபார் தீவு-போர்ட்பிளேரிலிருந்து 420 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக இன்று மதியம் மியான்மர் கடற்கரையைக் கடக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை

22.03.22: வடக்கு அந்தமான கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடற்கரை பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மியான்மர் கடற்கரை பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுன் வேகம் படிப்படியாகக் குறைந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.