தமிழ்நாடு

‘தடுப்பூசி போடாதவர்களால்தான் கரோனா உருமாற்றம்’: தமிழக அரசு

DIN

தடுப்பூசி போடாதவர்களால்தான் கரோனா உருமாற்றம் அடைவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என பல மாநில அரசுகள் அறிவித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது.

இதில், தமிழக அரசுத் தரப்பில் கூறியதாவது:

“தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால்தான் கரோனா உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதாக நிபுணர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர்.

எனவே, மத்திய அரசு கூறியதையடுத்து தமிழகத்தில் 100 சதவிகிதம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு எடுத்து வருகின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT