தமிழ்நாடு

74 நாள்கள் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை; உண்மை பதிலை அளித்துள்ளேன்: ஓ.பன்னீர்செல்வம்

DIN

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து 8 முறை சம்மன் அனுப்பப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றும், இன்றும் காலை - மாலை என்று ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒத்துழைப்பு அளித்து பதிலளித்துள்ளதாகவும் கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 22) ஆஜரானார். 

அவர்களுடைய விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உண்மையான உரிய பதிலை அளித்துள்ளேன். முரணான பதிலை நான் அளிக்கவில்லை. 

நேற்றும், இன்றும் காலை - மாலை என்று, ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒத்துழைப்பு அளித்து பதிலளித்துள்ளேன்.

ஆணையத்திலிருந்து 8 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக பரவிய தகவல் பொய்யானது. 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு 6 முறை எனக்கு கடிதம் கிடைத்தது. 

ஒரு முறை பட்ஜெட் இருந்ததாலும், ஒரு முறை சொந்த காரணத்தாலும் என்னால் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக முடியவில்லை. ஆணையத்தில் தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால், உண்மையை ஆணையம் தான் கண்டறியும் என்று கூறினார். 

பேட்டியின்போது, சசிகலா குறித்த கேள்விக்கு, சசிகலாவை 'சின்னம்மா' என்று குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் மீது எனக்கு சந்தேகமில்லை. தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT