குரூப் 2 மற்றும் 2ஏ விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு
தமிழகத்தில் காலியாகவுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஏறத்தாழ 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வுக்கு விண்ணப்பித்திருப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிடும் எனத் தெரிகிறது.
குரூப் 2 மற்றும் 2ஏ தொகுதியில் காலியாகவுள்ள 5, 400-க்கும் அதிகமான பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த பிப்ரவரி 23-இல் வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
குரூப் 4 தோ்வு அறிவிக்கை: இதனிடையே, கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை உள்ளடக்கிய குரூப் 4 தோ்வுக்கான தவறான அறிவிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து, விளக்கமளித்துள்ள தோ்வாணையம், அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கைகளும் தோ்வாணையத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். எனவே, இணையதளத்தில் பாா்த்து அறிந்து கொள்ளலாம் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.