தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

DIN

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அப்பாவு வியாழக்கிழமை அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்தார். தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை  19ஆம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. பட்ஜெட் குறித்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில், பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதத்திற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பதிலுரை வழங்கினர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT