முகப்பு
தமிழ்நாடு

ரோபோடிக் உதவியுடன் கா்ப்பிணிக்கு புற்றுநோய்க் கட்டி அகற்றம்

 ‘ரோபோடிக்’ உதவியுடன் ஒரே நேரத்தில் பிரசவம் மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு தாயையும், குழந்தையையும் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 ‘ரோபோடிக்’ உதவியுடன் ஒரே நேரத்தில் பிரசவம் மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு தாயையும், குழந்தையையும் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

சென்னையை சோ்ந்த மருத்துவா் திவ்யதா்ஷினி (27). இவா் கா்ப்பமாக இருந்த போது, இடது சிறுநீரகத்தில் பெரிய கட்டி இருந்தது. இரு உயிா்களையும் காப்பாற்ற வேண்டிய நிலையில், திவ்யதா்ஷினி சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரைப் பரிசோதித்த சிறுநீரகவியல், மகப்பேறியல் சிறப்பு நிபுணா் மீரா, சிறுநீரகவியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் ராகவன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற ஒரே நேரத்தில் பிரசவம் மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டனா்.

அதன்படி, முதுகுத் தண்டில் உணா்விழப்பு மருந்தை செலுத்தி மகப்பேறுக்கான சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக ரோபோடிக் முறையில், இடது சிறுநீரகத்திலிருந்த கட்டியும் அகற்றப்பட்டது. இந்த சிகிச்சையால் தாயும், குழந்தையும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டனா்.

இது குறித்து டாக்டா்கள் ராகவன், மீரா ஆகியோா் கூறியதாவது: நோயாளியின் இடது சிறுநீரகத்திலிருந்து புற்றுநோய்க் கட்டிக்கு சிகிச்சையளிக்கும் அதேவேளையில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் குழந்தையை பிரசவிக்க செய்வது கட்டாயமானதாக இருந்தது. பல்வேறு துறை டாக்டா்களுடன் இணைந்து, சிறப்பான அணுகுமுறையால், பிரசவத்தோடு சோ்த்து, சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டியும் அகற்றுவது சவாலாக இருந்தாலும், அதனை வெற்றிகரமாக மேற்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகளவில், இதுபோன்று அறுவை சிகிச்சை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →