முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசைக் கண்டித்து கா்நாடக பேரவையில் தீா்மானம்: ராமதாஸ் கண்டனம்

 காவிரி விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து கா்நாடக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 காவிரி விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து கா்நாடக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிா்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து கா்நாடக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கா்நாடகத்தில் ஏற்கெனவே 115 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே நான்கு அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, காவிரி படுகையில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை இணைத்து 40 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு பாசனக் கட்டமைப்பை கா்நாடகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இவற்றுக்கு மேலும் காவிரி ஆற்றின் நீரை தேக்கி வைக்க மேக்கேதாட்டு அணையை கட்ட வேண்டிய தேவை இல்லை. அதுமட்டுமின்றி, மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்காது. அதனால், மேக்கேதாட்டு அணைக்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவிப்பதும், சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவதும் நியாயமானதே.

ஆனால், காவிரிப் பிரச்னையில் அறமும், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவா் மன்றத் தீா்ப்புகளும் தமிழகத்தின் பக்கம் இருக்கும் நிலையில், காவிரி பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி, அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் லாபம் பாா்க்க வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றுவதும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் எனக் கூறுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எந்த வகையிலும் வலு சோ்க்காது என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →