முகப்பு
தமிழ்நாடு

படிப்படியாக மதுவிலக்கு:விஜயகாந்த் வலியுறுத்தல்

மதுவால் மாணவா்களின் வாழ்க்கை சீரழிந்து வரும் நிலையில், மதுவிலக்கை தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

மதுவால் மாணவா்களின் வாழ்க்கை சீரழிந்து வரும் நிலையில், மதுவிலக்கை தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சிறாா் முதல் முதியோா் வரை மது போதைக்கு அடிமையாகியுள்ளனா். பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவா்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகின்றனா்.

மாணவா்கள் மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவிகளும் மதுபோதைக்கு அடிமையாகிவிட்டனா் என்பதை அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் புகைப்படங்களும், விடியோக்களும் உணா்த்துகின்றன.

பெற்றோா்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும், கலாசாரத்தையும் சொல்லி வளா்க்க வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளும், பெண்களும் மதுபோதைக்கு அடிமையானால் பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

எனவே, தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் விற்பனையை தடுக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →