தமிழ்நாடு

புதிய சாதனை படைத்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை: அமைச்சர் பி. மூர்த்தி

DIN

நடப்பு நிதியாண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வணிகவரி மற்றும் பதிவுத் துறை ஆகிய இரு துறைகளும் கடந்து சாதனை புரிந்துள்ளதாக அமைச்சர் பி. மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். 

2021- 22ஆம் ஆண்டு திருத்திய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வணிகவரிகளில் வருவாய் ரூ.96,109.66 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டு வருவாய் இலக்கான ரூ.96,109.66 கோடியை கடந்த 15.03.2022 அன்று வணிகவரித்துறை கடந்துள்ளது. 24.03.2022 தேதி வரை வணிகவரித்துறையில் ரூ.1,00,346.01 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதே போல பதிவுத்துறையில் 2021-22ஆம் ஆண்டு திருத்திய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.13,252.67 கோடியாகும். இந்த இலக்கை கடந்த 23.03.2022 அன்று பதிவுத்துறை கடந்துள்ளது. 24.03.2022 தேதி வரை பதிவுத்துறையில் ரூ.13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடப்பு நிதியாண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வணிகவரி மற்றும் பதிவுத் துறை ஆகிய இரு துறைகளும் கடந்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT