திமுகவின் வழக்கை சந்திப்பேன்: கே.அண்ணாமலை
திமுகவின் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.
திமுகவின் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் ட்விட்டரில் கூறியிருப்பது:
ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக என் மீது மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.
திமுகவின் முதன்மை, சாதாரண சாமானியனான என்னையும் அவா்களைப் போன்ற துபை குடும்பத்துக்குச் சரிசமமாக நடத்துகிறது. நம்நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
திமுகவின் அச்சுறுதல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான என் போராட்டம் தொடரும். துணிவுடன் மக்கள் துணையுடன் என்று கூறியுள்ளாா்.