பா. கா. மூக்கையாத்தேவர் 
தமிழ்நாடு

மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மறைந்த பா. கா. மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மறைந்த பா. கா. மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் எஸ் தினகரன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பியுள்ள மனுவில்,  மறைந்த தலைவர் பா. கா. மூக்கையாத்தேவர் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக 30 ஆண்டுகள் இருந்தவர். ஒரேசமயம் நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பிரிவு மக்களுக்காக மூன்று கல்லூரிகளை நிறுவியவர், பார்வர்ட் பிளாக் கட்சி தேசிய தலைவராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்த போது தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து திராவிட ஆட்சியை தொடங்கி வைத்தவர். இவ்வாறு பல்வேறு சிறப்பு வாய்ந்த மூக்கையாத் தேவருக்கு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 

இந்நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம், அவரது நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவரது பிறந்த ஊரான பாப்பா பட்டியில் உள்ள கள்ளர் அரசு பள்ளிக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும், அவருடைய நினைவிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாங்கள் அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை: சுசிலா கார்கி

Botox சிகிச்சை முறை யாருக்கு அவசியம்!மருத்துவரின் முக்கிய ஆலோசனைகள்!

வரலாற்றில் இந்து தீவிரவாதிகளே இல்லை: ஜகத்குரு ராமபத்ராச்சாரியார்

“நடிகர் அஜித், நயன்தாராவுக்கு இதைவிட கூட்டம் வரும்!” பத்திரிகையாளரை சாடிய சீமான்!

திராட்சை... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT