தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலையில் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்: யூஜிசி

DIN

அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தியுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த இந்த பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெறாமல் இந்த படிப்புகளை வழங்குவது, யூஜிசியின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்ச் 25ஆம் தேதியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அங்கீகாரம் வழங்காததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகமே பொறுப்பு, இந்த படிப்புகளில் படித்து வேலை வாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் பல்கலைக்கழகமே பொறுப்பு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15ஆம் ஆண்டு வரைதான், அண்ணாமலை பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வியை அளிக்க அங்கீகாரம் பெற்றிருந்தது.  அதன்பிறகு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அங்கீகாரம் பெறாத பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வது அவர்களது வேலை வாய்ப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

SCROLL FOR NEXT