திருப்பூர் ஆட்சியகரத்தில் சிறுபான்மையினர் குறைதீர் கூட்டம்: இரு தரப்பினர் மோதல்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் புதன்கிழமை சிறுபான்மையினர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் புதன்கிழமை சிறுபான்மையினர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை புகார் மனுக்களாக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சிடம் வழங்கினர்.
இதில் 1 சிறுபான்மையினருக்கு ரூ2.77 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள திருப்பூர் சிட்டி ஏ.ஜி சபையில் கிறிஸ்துவ போதகராக பரமானந்தம் என்பவர் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது தொடர்பாக சியாக் ஸ்தாபன தலைவர்களுக்கு புகார் அளித்ததன் பேரில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே வேறு ஒரு நபர் மதபோதகராக வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தேவாலயம் கடந்த மூன்று வாரங்களாக பூட்டப்பட்டுள்ளது. ஆகவே சிறுபான்மையினர் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க தேவாலயத்தில் வழிபடும் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போதகர் பரமானந்தம் தரப்பினரும் மனு அளிக்க வந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மனு அளிக்க வந்த இரு தரப்பினரும் மனு அளித்து விட்டு வெளியே வந்ததும் இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினருக்கான குறைதீர் கூட்டத்தில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட இருதரப்பினர்.