தமிழ்நாடு

ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது. 

அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் தொடங்குகிறது.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் முதலில் 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

மே 4 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT